தென்னாபிரிக்காவுடனான போட்டியின் தலைமை கௌஷால் சில்வாவுக்கு….

தென்னாபிரிக்காவின் வளர்ந்து வரும் அணி மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே எதிர்வரும் 26ம் திகதி சிலாபம் மேரியன்ஸ் (கட்டுநாயக்க) மைதானத்தில் நடைபெறவுள்ள முதலாவது நான்கு நாள் போட்டிக்கு இலங்கை குழாமுக்கு விளையாட்டு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

அணியின் தலைமை கௌஷால் சில்வாவுக்கும் உப தலைமை சரித் அசலங்கவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை குழாம் – கௌஷால் சில்வா (தலைவர்), மாதவ வர்ணபூர, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க (உப தலைவர்),ஷம்மு அஷான், மனோஜ் சரத்சந்திர, கமிந்து மென்டிஸ், ஷாமிக கருணாரத்ன, மலிந்த புஷ்பகுமார, லஹிறு கமகே, திலேஷ் குணரத்ன

 

R.Rishma