தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் திட்டத்தினை ஹதுருசிங்க அம்பலப்படுத்தினார்

(FASTGOSSIP| COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடனான போட்டிக்கு இலங்கை அணியானது நாளை(28) களமிறங்குவது அவர்களது நுட்பங்களை நன்கு அறிந்தே ன இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

#திட்டம்

‘நாம் இந்தப் போட்டிக்கு முக்கிய அவதானத்தினை செலுத்தியுள்ளோம். இந்தப் போட்டியில் நாம் முதலில் துடுப்பெடுத்தாடினால் எமது துடுப்பாட்டத்தினை திறமையாகவும், களத்தடுப்பு எனின் பந்துவீச்சில் முழுமையான கவனத்தினையும் செலுத்த எதிர்பார்த்துள்ளோம். எச்சந்தற்பத்திலும் போட்டி கையினை விட்டும் நழுவ இடமளிக்கக் கூடாது. அண்மைக்காலமாக நாம் தென்னாபிரிக்க அணியுடன் போட்டிகள் சில விளையாடியுள்ளோம். அவர்களில் உள்ள சிறந்த வீரர் யாரென்ற எமது அவதானத்தினை செலுத்தியுள்ளோம். அவர்களை முடிந்தளவு போட்டியில் இருந்து தூரமாக்குவதே எமது திட்டமாகும். இங்கிலாந்துடனான போட்டியினைப் போன்று எமது வீரர்கள் அனைவரும் திறமைகளை வெளிக்காட்ட வேண்டும்.’

#தென்னாபிரிக்கா உடனான நாணயற் சுழற்சி

‘‘தென்னாபிரிக்கா உடனான போட்டியின் நாணயற் சுழற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் நாம் நியூசிலாந்து அணியுடனான போட்டியின் நாணயற் சுழற்சியில் நாம் தோற்று விட்டோம். இங்கிலாந்து அணியுடனான நாணய சுழற்சியில் வெற்றி பெற்றோம். ஆடுகளமானது மாலையாகும் போது ஈரலிப்புத் தன்மையாக இருக்கும். விக்கெட்டினை கைப்பற்ற முடியாது போனால் ஓட்டங்களை தடுக்க முடியாது.’’

#நீண்ட ஓய்வு

‘‘எமக்கு தென்னாபிரிக்க அணியுடனான போட்டிக்கு ஆறு நாட்கள் நீண்ட ஓய்வு ஒன்று கிடைத்தது.. தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டோம். எனினும், இங்கிலாந்து அணியுடனான போட்டியின் பின்னர் இரண்டு நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டது.. அதனால் அவர்களுள் புத்துணர்ச்சி ஏற்படும். அந்த இரு நாட்களும் வீரர்கள் மிகவும் குதூகலமாக இருந்தார்கள்.’’

#இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி

‘‘அது தான் கிரிக்கெட் விளையாட்டு என்பது… அதுதான் கிரிக்கெட்டின் சுவாரஷ்யம். நாம் தொடங்கினால் அதனை முடித்து வைப்பது கட்டாயம்.’’