(FASTNEWS | COLOMBO ) – இலங்கைக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் தென்னாபிரிக்கா அணி 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியமை தொடர்பில் அணியின் தலைவர் லசித் மாலிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, Q de Kock , F du plessis,மற்றும் DA Miller ஆகியோர் மிகவும் சவால்மிக்க வீரர்கள் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த வீரர்கள் கடந்த 03 ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக களமிறங்கி இருந்தனர். அவர்களது அனுபவம் எல்லாவற்றிலும் விட பலமானது. அதனை நம்மால் ஈடு செய்ய சிரமமாக உள்ளது.
என்றாலும் நாம் எமது முயற்சிகளை இழக்க விரும்பவில்லை. எதிர்பாரா விதமாக மழை குறுக்கிட்டமையினால் நாம் பின்னடைந்தோம் என லசித் மாலிங்க தெரிவித்திருந்தார்.