தென்னாபிரிக்க அணியுடன் இன்று(28) மோதவுள்ள இலங்கை அணியின் 11 வீரர்களும் இவர்கள் தான்

(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35வது போட்டியில் இன்று(28) இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் போட்டியிடவுள்ளன.

இறுதிச் சுற்றுக்கு தகுதி பெரும் நம்பிக்கையை வலுப்படுத்த இலங்கை அணியானது குறித்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.

தென்னாபிரிக்க அணியானது தற்போது இறுதி சுற்றினை இழந்துள்ளது.

இந்நிலையில், சுகயீனம் காரணமாக இன்றைய(28) போட்டியில் நுவான் பிரதீப் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சுரங்க லக்மால் களமிறக்கப்பட உள்ளதாக அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று விளையாட எதிர்பார்த்துள்ள வீரர்கள் –

1.திமுத் கருணாரத்ன 2. குசல் பெரேரா 3. அவிஷ்க பெர்னாண்டோ 4.குசல் மென்டிஸ் 5. ஏஞ்சலோ மேத்யூஸ் 6.ஜீவன் மென்டிஸ் 7.தனஞ்சய டி சில்வா 8.திசர பெரேரா 9.இசுறு உதான 10. லசித் மாலிங்க 11.சுரங்க லக்மால்