சுற்றுலா தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிராக ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று(09) இடம்பெற்ற முதலாவது உத்தியோகப்பூர்வமற்ற ஒருநாள் போட்டியில் 215 ஓட்டங்களால் இலங்கை வளர்ந்து வரும் அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி, போட்டிகள் 03 கொண்ட ஒருநாள் போட்டிகளில் 1-0 என்ற கணக்கில் இலங்கை வளர்ந்து வரும் அணியானது வெற்றி பெற்றுள்ளது.
நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இலங்கை வளர்ந்து வரும் அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்களை இழந்து 376 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன(125) மற்றும் சதீர சமரவிக்கிரம(141) பெற்ற நிலையில் 252வது ஓட்டத்தில் முதல் விக்கெட் இழக்கப்பட்டது.
377 ஓட்டங்கள் என்ற இலக்கில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணியாது 33.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma