தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

(FASTNEWS|COLOMBO) – தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று(19) இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டி மழை காரணமாக 49 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்க அணி 49 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.