தென்னாப்பிரிக்கா சுற்றுலா தொடருக்காக தாம் உடல் நிலை தேறியுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உப தலைவர் தினேஸ் சந்திமாலும் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் காயம் காரணமாக அண்மையில் சிம்பாப்வேயில் இடம்பெற்ற தொடரில் பங்கேற்கவில்லை.
இதன்படி அந்த தொடரின் போது, டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்பட்டதுடன், ஒருநாள் போட்டியில் உபுல் தரங்க தலைவராக செயற்பட்டிருந்தார்.
இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான தொடர் இந்த மாத இடையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் திகதி போட் – எலிசபத்தில் ஆரம்பமாகவுள்ளது.