தென்னாப்பிரிக்க அணியினை பந்தாடிய சுரங்க லக்மால்…

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(27) தொடரவுள்ளது.

போட் எலிசபெத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டம் நேர முடிவின் போது, 6 விக்கட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.