தென்மாகாணத்திற்கு தமிழ் மொழி ஆசிரியர்கள் 314 பேருக்கு வெற்றிடம்…

(FASTNEWS | COLOMBO)- தென் மாகாணத்திற்கான தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் 314 பேரினை சேர்த்துக் கொள்ள தென் மாகாண கல்வியமைச்சினால் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணத்தில் தமிழ் மொழி மூல ஆசிரிய வெற்றிடங்கள் 314 உள்ள நிலையில், இரண்டு வாரங்களுக்குள் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் தமிழ் மொழி ஆசிரியர்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தென் மாகாண சபை ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்திருந்தார்.