தென்மேற்கு கடலோரங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம்

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (08) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மன்னார் ஹம்பாந்தோட்டை ஊடாக புத்தளம் காலி முதலான கடலோரங்களில் காலையில் மழை பெய்யலாம் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தென்மேற்கு கரையோரமாக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படலாம் எனவும் இக்காற்றின் வேகம் மணிக்கு 20 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.