தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே நேற்று(23) இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 308 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.