தென் ஆப்பிரிக்கா தொடரில் எனது இலக்கு: சொல்கிறார் முரளிவிஜய்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடல் தகுதி பெறுவேன் என்று இந்திய தொடக்க வீரர் முரளிவிஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத முரளிவிஜய், 2வது டெஸ்ட் போட்டியில் 82 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

காயம் காரணமாக 3வது டெஸ்டில் விளையாடாமல் நாடு திரும்பினார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உடல் தகுதி பெற்று சிறப்பாக விளையாடுவதை இலக்காக கொண்டிருக்கிறேன் என்று முரளிவிஜய் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏற்கனவே தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறேன் என்றும், இதனால் தன்னால் முழு திறமையை வெளிப்படுத்த இயலும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையே 4 டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதன் முதல் டெஸ்ட் நவம்பர் 5ம் திகதி மொகாலியில் தொடங்குகிறது.