சூதாட்ட குழுவினால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கட் வீரர் அல்விரோ பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் அல்விரோ பீட்டர்சன் உள்ளூர் போட்டி ஒன்றின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
இதுதொடர்பில் விசாரணை நடத்திய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சபை, அஸ்விரோ பீட்டர்சன் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என உறுதி செய்து அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது.
இந்நிலையில் கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை மேற்கொள்ளும் சில குழுவினால் தனது உயிருக்கும் குடும்பத்தார் உயிருக்கும் ஆபத்து இருப்பதை தான் அறிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் பாதுகாவலர்களை நியமிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பீட்டர்சனுக்கு விதிக்கப்பட்டுள்ள விளையாடுவதற்கான தடை 2018ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகிதி வரை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.