தென் ஆப்ரிக்காவில் ஆயுத கிடங்கு வெடிப்பு – 8 பேர் உயிரிழப்பு…

தென் ஆப்ரிக்கா கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆயுத கிடங்கில் கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயம் அடைந்தனர்.

வெடி விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.