தென் கொரியாவில் நாளை(09) நடைபெறுவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப விழாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை(9) ஆரம்பமாகி 25ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த போட்டியில் தடகள வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் என 280 பேரை கொண்ட வடகொரிய குழு, நேற்று(07) தென்கொரியா சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ ஜாங் வட கொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் அரசியல் விவகார உயர் மட்டக்குழு உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.