தென் பசுபிக் கடலில் 7.1 ரிக்டர் அளவில் நில அதிர்வு : சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை…

தெற்கு பசுபிக் சமுத்திரத்தில் உள்ள New Caledonia எனும் தீவினை அண்மித்த கடல் 7.1 ரிக்டர் அளவுகோளில் நில நடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

குறித்த நில அதிர்வானது கடலில் 10Km ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் New Caledonia, வனாட்டு மற்றும் பீஜி தீவு, பெபுவா நியு கினியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய கடலோர மண்டலங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.