தென் மாகாணத்தில் பரவி வரும் காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட ஆரம்ப பாடசாலைகளை மீள திறப்பது பிற்போடப்பட்டுள்ளது.
அதன்படி , குறித்த ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் மாதம் 4ம் திகதி திறக்கப்டும் என தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்ர தெரிவித்தார்.
மேலும், உடகம , மொரவக , காலி , மாத்தறை , முலடியன , அகுரெஸ்ஸ , தங்காலை, வலஸ்முல்ல போன்ற கல்வி வலயங்களுக்கு உரித்தான பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு 24,25 மற்றும் 28ம் திகதிகளில் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.