தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ.வி.உபுல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.
பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் கருத்து வௌியிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.