தெரணியகல பகுதியில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலிபொட பெருந்தோட்ட பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் இன்று(27) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ரங்வல்ல மாலிபொட பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(27) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட பெண்ணுடன் உயிரிழந்த மற்றுமொரு நபரும் சந்தேகநபரும் ஏற்படுத்திக் கொண்ட தகாத உறவு தொடர்பில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன் இதன் போது இரண்டு சிறுமிகளும் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.