இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் தெரிவுக்குழுவின் தலைவராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால அண்மையில் அறிவித்திருந்தார். அது எவ்வாறாயினும் இற்றை வரை தெரிவுக்குழுவின் தலைவர் பதவி குறித்து சனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், சனத் ஜயசூரிய மே 01ம் திகதி முதல் புதிய தெரிவுக்குழுவின் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கை அணியின் முன்னாள் தெரிவுக்குழு தலைவரான சனத் ஜயசூரிய 2014ம் ஆண்டு பங்களாதேசில் இடம்பெற்ற ஆசியக்கோப்பை போட்டி மற்றும் இருபதுக்கு20 உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்ற இலங்கை அணியின் தெரிவுக்குழுவில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.