(FASTNEWS | COLOMBO) – இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவை, பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு மீண்டும் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவுக் குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, எதிர்வரும் 31ஆம் திகதி இவர், தெரிவுக் குழுவில் முன்னிலையாவாரென்றும் அன்றைய தினமே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்திரயரத்னவையும் விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.