தெருத்தெருவாக அப்பளம் விற்ற பிரபல ஹிந்தி நடிகர்… (Photos)

பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக ஜெய்ப்பூர் வீதியில் அப்பளம் விற்று நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங், ஜனவரி மாதம் மும்பையில் ஆரம்பமானது. இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக ஆசிரியராக நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சைக்கிள் ஒன்றில் தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. ரசிகர்களால் கண்டு பிடிக்க முடியாதபடி பழைய ஆடைகளுடன் அசல் அப்பளம் விற்பவரைப் போலவே இருந்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.

 

Image result for hrithik roshan super 30

Image result for hrithik roshan super 30

Image result for hrithik roshan super 30