தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று ஆரம்பம்…

தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று(11) கொழும்பில் ஆரம்பமாகிறது.

நிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று ஆரம்பமாகிறது.

பங்களாதேஷிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற முதலாம் இரண்டாம் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிகள் குறித்தும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்கள். அனைத்துப் பாராளுமன்ற சங்கத்தின் ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த மாநாடு நாளையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.