தெற்கில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் கண்டறியப்பட்டது…

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் காய்ச்சலுக்கான காரணம் ´இன்புளூவன்ஸா ஏ´ வகையான வைரஸினால் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தென் மாகாண மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், இதில் மாத்தறை மாவட்டத்தில் 9 குழந்தைகளும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் தலா 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.