தெற்குப் பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய சப்தமானது விண் எரிகல் – ஆதர் சீ கிளார்க் ஆய்வு மையம்..

தெற்குப் பிரதேசத்தில் நேற்று(18) இரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து தென்பட்ட பிரகாசம் தொடர்பில் மக்கள் பயப்படத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த இந்த அசாதாரண சப்தம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆதர் சீ கிளார்க் ஆய்வு நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிலையில், நேற்றைய அசாதாரண சப்தத்திற்கு காரணம் விண் எரிகல் என அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை, கொழும்பு பிரதேசத்துக்கும் குறித்த இந்த சப்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக வானியல் துறையின் பேராசிரியர் சந்தன ஜயரத்னவிடம் இது தொடர்பில் கேட்கப்பட்ட போது, இதற்கு முன்னர் பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு வின் எரிகல்லாக இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

 

(rizmira)