நாட்டில் நிலவும் காலநிலையினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியதோடு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் மணிக்கு 60Km வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் புற வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.