(FASTNEWS|COLOMBO) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் மொத்த தூரம் 96 கிலோ மீட்டர் என்பதுடன், 04 கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ள மொத்த தொகை 242 பில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது 80 சதவீதமளவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரிய ஆராச்சி தெரிவித்துள்ளார்.