(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் மேலும் இரு பகுதிகள் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
வெட்டிய, சூரியவெவ, அந்தரவெவ ஊடாக மத்தல வரையான பகுதி மற்றும் அந்தரவெவவிலிருந்து அம்பாந்தோட்டை வரையான பகுதி வீதிகளே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளன.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்து குறித்த வீதிகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியுமென, வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.