தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை – கடுவலை வரையான பகுதி மீளவும் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
உயர் அழுத்தம் கொண்ட மின்சார கம்பி அறுந்து வீதியில் வீழ்ந்ததன் காரணமாக குறித்த பாதையிலான வாகனப் போக்குவரத்து நேற்று(09) இரவு 09.00 மணி முதல் மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும், பின்னர் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியிருந்த நிலையில், தற்போது, வீழ்ந்து கிடக்கும் மின்சார கம்பியை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மீளவும் இன்று(10) 12.30 முதல் 04.30 வரை அப் பகுதி மூடப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.