(FASTNEWS | COLOMBO) – தெற்கு அதிவேக வீதியின் களனிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடவத்தையிலிருந்து பண்டாரகம நோக்கி பயணித்த பாரவூர்தியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணமென பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிகிச்சைக்சைக்காக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.