தெற்கு அதிவேக வீதியில் கொள்கலன் விபத்து…

தெற்கு அதிவேக பாதையின் பண்டாரகம பத்தேகொட பிரதேசத்தில் இன்று(15) அதிகாலையில் கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடவத்தையில் இருந்து காலி பின்னதுவ பிரதேசத்தை நோக்கி பலகைகள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதியின் நித்திரைக் கலக்கமே இவ்விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.