தெற்கு அதிவேக வீதியில் மூடப்பட்ட வாயில்கள் மீளவும் திறப்பு..

தெற்கு அதிவேக வீதியில் கடுவளை மற்றும் கடவத்தைக்கு இடையே ஒரு பகுதி நேற்று(09) இரவு 9.00 மணியளவில் தற்காலிகமாக மூடப்பட்டதை அடுத்து குறித்த வாயில்கள் தற்போது மீளவும் திறக்கப்பட்டுள்ளது.

உயர் மின் விநியோக கம்பியொன்று குறித்த வீதியில் உடைந்து விழுந்தமை காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதி நேற்று மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)