தெற்கு கலிபோர்னியாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மலைப்பிரதேசங்களில் வெள்ளமும், ஐரோப்பிய நாடுகளில் கடும் பனியும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள மலை பிரதேசங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தமையினால் பனி உறைந்து கிடந்த ஆறுகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, கலிபோர்னியா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுஉள்ளது.

மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.