தெற்கு பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் ஆயுதக் கிடங்கிற்கு சீல் வைப்பு..

(FASTNEWS | COLOMBO) –  காலி – ரத்கம பிரதேசத்தில் வியாபாரிகள் இருவரை கடத்திச் சென்று கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் கடமையாற்றும் தெற்கு மாகாண டிஐஜி விசாரணை அலகின் ஆயுத மற்றும் துப்பாக்கி கிடங்கு நேற்று(25) சீல் வைக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய குறித்த சீல் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த பொலிஸ் விசாரணை பிரிவு அதிகாரிகள் உபயோகித்த T – 56 வகையான துப்பாக்கியும் குறித்த கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக அதற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.