அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தேங்காயின் சில்லறை விலை தற்போது குறைந்திருப்பதாக தெங்கு செய்கைச் சபை தெரிவித்துள்ளது.
எனினும், கூடிய விலைக்கு தேங்காயை விற்பனை செய்வதாக நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடைகளில் தேங்காயின் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைக் காட்சிப்படுத்தலின் கீழ் தேங்காயின் விலையும் சேர்க்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். அவ்வாறு காட்சிப் படுத்தாத வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபையினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.