அதன்படி, ஒரு தேங்காயின் உயர்ந்தபட்ச சில்லறை விலை 75 ரூபாவாகும்.
உயர்ந்தபட்ச விலையை விட கூடுதலான விலைக்கு தேங்காயை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கு சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கபில யக்கந்தலாவ தெரிவித்துள்ளார்.
நுகர்வோருக்கு தேவையான தேங்காய் நாட்டில் காணப்படுகின்றது. இதனால், கூடுதலான விலைக்கு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை கிடையாது.
சில வர்த்தகர்கள் நுகர்வோரின் பணத்தை சுரண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். சில இடங்களில் 100 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை செய்யப்படுகிறது. இதுபற்றிய அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக தெங்கு செய்கை சபை நடவடிக்கை எடுத்துள்ளது.