ஒன்றினைந்த எதிர் கட்சிகள் இன்று மீட்டியாகொட, சீனிகம நகரில் கூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுகின்றது.
அதாவது, பொலிஸ் நிதிக் குற்றத்தடுப்புப் பிரிவின் ஓராண்டு பூர்த்தி இன்று கொண்டாடவுள்ள நிலையில்,பொலிஸ் நிதி மோசடிப்பிரிவினை மூடவேண்டுமென சீனிகம ஆலயத்தின் முன்பாக ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் தேங்காய் உடைத்து எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இக்குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
சீனிகம ஆலயத்தில் தேங்காய் உடைக்க குறித்த குழுவினர் ஆயத்தமாகும் போது, மற்றுமொரு குழுவினர் இவர்களுக்கு எதிராக குறித்த ஆலயத்தினுள் நுழைந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேஷாபிமானி ஜாதிக பெரமுன என்ற அமைப்பே இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இன்னும், குறித்த இரு கூட்டத்திற்கும் இடையே கைலாகுகள் நிகழ பொலிஸாரின் தலையீட்டினால் நிலைமை வழமைக்குத் திரும்பியதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
[youtube url=”https://www.youtube.com/watch?v=qZSGjv0xLjI” width=”560″ height=”315″]




