தேங்காய் துருவல் சேர்த்து காபி பர்பி..

குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று காபி, தேங்காய் துருவல் சேர்த்து பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 1 கப்
காபி – அரை கப்
சர்க்கரை – தேவைக்கு
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – தேவையான அளவு

செய்முறை :

முந்திரி பருப்பை தூளாக்கி கொள்ளவும்.

வாணலியில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். அடுத்து அதில் நெய், காபி, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறிவிட வேண்டும்.

ஓரளவு கெட்டியாகி பதம் வந்ததும் இறக்கிவிட வேண்டும். அகன்ற தட்டில் நெய் தடவி விட்டு அதில் இந்த கலவையை ஊற்றி சமமாக பரப்பி விட வேண்டும்.

பின்னர் முந்திரி பருப்பு தூளை அதன் மேல் தூவி விட வேண்டும்.

பின்னர் விரும்பிய வடிவத்தில் வெட்டி பர்பியை ருசிக்கலாம்.