தேசத்தின் மனசாட்சி இன்று சிறிகொத்தவின் மனசாட்சியா – விமல்

மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஏற்பாடு செய்த விசேட மாநாடு மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டினை அரச தொலைக்காட்சி ஒன்றில் நேரடி ஔிபரப்புச் செய்ய 8 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த நிதியை கட்சியில் இருந்து செலவு செய்யவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையின் ஐக்கியம் பற்றி பேசவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏதுவான கட்சியை அநுரகுமார உருவாக்கியுள்ளதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசத்தின் மனசாட்சி இன்று சிறிகொத்தவின் மனசாட்சியாக மாறியுள்ளதென விமல் வீரவன்ச கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

(riz)