(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 27 தடவையாக நடைபெற்றுவரும் வர்த்தக கிரி்க்கெட் போட்டியில் மாஸ் யுனிச்செலா மற்றும் ஜான்கீல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜான் கீல்ஸ் அணி சார்பாக 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி முகம்மட் சிராஸ் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தேசிய அணி வீரர்களின் விக்கெட்டுக்களை பதம் பார்க்கும் முகம்மட் சிராஸின் குறித்த காணொளி மிக வேகமாக பரவுகிறது.
VIDEO : ThePapare .com
மடவள மதீனா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான முகம்மட் சிராஸ் தனது விடாமுயற்சியினால் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
கஸ்டமான குடும்ப சூழ்சிலையைக் கொண்டிருந்த போதிலும் தனது கிரிக்கெட் விளையாட்டை சிராஸ் கைவிடாமல் அடுத்த கட்டத்திற்குத் தயாரானார். இலங்கையின் பிரபல கழகங்களில் ஒன்றான கோல்ஸ் கழகத்துடன் இனைந்து கொண்டார்.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 29,30 ம் திகதிகளில் மூவர்ஸ் அணிக்கும், கோல்ஸ் அணிக்குமிடையிலான முதலாம் தர பிரிமியர் லீக் போட்டியில் அறிமக வீரராக இடம்பெற்றார். இப்போட்டியில் ஒரு விக்கட்டினை வீழ்த்தினார்.
2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாவட்ட மட்ட ஒருநாள் போட்டிகளில் கேகாலை மாவட்டம் சார்பாக விளையாடிய முகம்மட் சிராஸ் புத்தளம் மாவட்ட அணிக்கெதிராக 9 ஓவர்கள் பந்துவீசி 47 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டினைக் கைப்பற்றினார்.
இதன் பின்னர் 2018இல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 23வயதுக்குட்பட்ட மாகாணங்களுக்கிடையிலான போட்டியில் மத்திய மாகாண அணியில் இடம்பெற்ற முகம்மட் சிராஸ் மிகச்சிறப்பாகப் பந்துவீசியதுடன் இத்தொடரில் மொத்தமாக 23 விக்கட்டுக்களைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.
கூடுதலான விக்கட்டுக்களைக் கைப்பற்றியதனால் இலங்கை A அணியில் முகம்மட் சிராசுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. சிராஸ் A அணியில் சேர்க்கப்படாததை ஊடகங்கள் பலதும் அன்று கண்டு கொள்ளாமை கவலைக்குரியதாகும்.
இந்நிலையில் கட்டார் நாட்டுக்கு பயணமானார். அங்கு பிராந்திய அணியில் சில மாதகாலம் விளையாடியதுடன் மீண்டும் நாடு திரும்பினார். இவ்வருட பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடுவத்றகாக பி.ஆர்.ஸி அணியோடு இனைந்து கொண்டார்.
11 இன்னிங்ஸில் பந்துவீசி மொத்தமாக 23 விக்கட்டுக்களை இதுவரை கைப்பற்றியுள்ளார். இவ்வருட பிரிமியர் லீக் தொடரில் ஆகக்கூடுதலான விக்கட்டுக்களை கைப்பற்றிய வீரராக முகம்மட் சிராஸ் காணப்படுகின்றார்.
பிரிமியர் லீக்கில் சிறப்பாக பந்து வீசி விக்கட்டுக்களைக் கைப்பற்றியதனால் இலங்கை வந்த அயர்லாந்து A அணிக்கெதிராக விளையாடும் இலங்கை A அணிக்கு முகம்மட் சிராஸை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் பரிந்துரைத்தனர். அந்த வகையில் தனது தெரிவை உறுதிப்படுத்துவது போல் அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்டிலும், இரண்டாவது டெஸ்டிலும் மிகச்சிறப்பாகப் பந்துவீசினார்.இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமா 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதன் காரணமாக தென் ஆபிரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் பயணம் கொள்ளும் இலங்கை அணியில் முகம்மட் சிராஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் தேசிய அணிக்குத் தெரிவான ஐந்தாவது முஸ்லிம் வீரராக தடம் பதித்தார்.
இருந்த போதிலும் அவருக்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.