நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் உறுதியாக தேசிய அரசாங்கம் உருவாக்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளன.
இன்னும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பினால், தேசிய அரசாங்கத்திற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தேர்தலில் வெற்றி பெறும் மைத்திரி தரப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி தேசிய அரசாங்கத்திற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளது.
மேலும், இவ்விணக்கப்பாட்டுக்கு அமைய பிரதிப் பிரதமர் பதவி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மைத்திரி தரப்பின் முக்கியஸ்தர் ஒருவருக்கு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை அதிகாரத்தை பெற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தை அமைக்க முடியாது.
இன்னும் தேசிய அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பும் இணக்கம் வெளியிட்டுள்ளமையினாலே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அரசாங்கம் அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய அரசாங்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி இதற்கு முன்னர் அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(riz)