தேசிய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஓரங்கட்டப்படும்…? – பொன்சேகா…

ஐக்கிய தேசிய கட்சியானது, யானை சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்குமென பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்ற(31) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இப்புதிய தேசிய அரசாங்கத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பல உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும், தேசிய அரசாங்கமானது யானைச் சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் அமையுமே ஒழிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சரத் பொன்சேக்கா; அரசியலுக்கு களமிறங்கிய ஆரம்ப காலங்களில் முஸ்லிம் மக்களை சவூதி அரேபியாவுக்கு திருப்பியனுப்ப வேண்டும் என கோசங்களை எழுப்பியவர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.