இதில் 47 கபினட் அமைச்சர்கள், 20 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்கள் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிதாக மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பில் மஹிந்த தரப்பு அணியினர் நேற்று முன்தினம் சபையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது தொaடர்பில் ஏற்பட்ட சர்ச்சையின் போது, அமைச்சர்களின் தொகையை நேற்று அறிவிப்பதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கூறியிருந்தார்.
பாராளுமன்றம் நேற்று கூடியபோது இது தொடர்பில் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன,கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்களின் தொகையை அறிவிப்பதாக அமைச்சர் ஒருவர் அறிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் தொகையை அறிவிக்குமாறு கோரினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக, தேசிய அரசாங்கம் என்பதால் இன்னும் சிலரை நியமிக்க முடியும்.
எதிர்ப்பக்கம் உள்ளவர்கள் அமைச்சு பதவி கோரி வருவதால் அமைச்சு பதவி வழங்குவது குறித்து மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறது.
யாப்பிற்கு உட்பட்டதாகவே அமைச்சர்களை நியமித்து வருகிறோம் என்றார்.
19வது திருத்தத்தினூடாக அமைச்சர்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுகையில் அமைச்சு தொகையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.