நல்லாட்சி அரசு தொடரும் – ராஜித அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில் தெரிவிப்பு..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்த தேசிய ஆட்சி அமைச்சரவை மாற்றங்களுடன் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில் இன்று(15) தெரிவித்திருந்தார்.

மேலும், மக்கள் அளித்த தீர்ப்புக்கு அமைய கூட்டணி அரசைத் தொடர முடிவு செய்திருப்பதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹஷீம் தெரிவித்தார். அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இன்று(15) காலை நடைபெற்ற ஐ.தே.க. சந்திப்பில் கலந்து கொண்டு வெளியேறிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், கூட்டணி அரசைத் தொடர்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அரசிடமே இன்னும் பெரும்பான்மை இருப்பதாகவும் அது இல்லை என்றால், இல்லை என கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

மேலும் அரசினது கொள்கைகளுக்கு அமையவும் கட்சியின் கொள்கைகளுக்குப் பங்கம் வராத வகையிலும் புதிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

#rishma