(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவராக கலாநிதி திரன் சிறிபத் டி சில்வா இன்று (02) மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 27ஆவது தலைவராகவும் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றவுள்ள இவர் கொழும்பில் உள்ள ஆனந்தாக் கல்லூரி மற்றும் பாணந்துறை ராஜகீய வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.
இராணுவத்தில் பிரிகேடியராகவும் பணியாற்றினார்.
இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.