தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்தின் தொழில்முயற்சியாண்மை தினம் இன்று…

தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரத்தின் தொழில்முயற்சியாண்மை தினம் இன்றாகும். வடமேல் மாகாண தலவில தேவாலயத்துக்கு அருகிலும், ஊவா மாகாண மகியங்கனை ஆதாஉல்பத்த கிராமத்திலும் இன்று(09) ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இத்தினத்தில் விவசாயத்துறை சார் இளம் தொழில் முயற்சியாளர்கள் 2500 பேரை சலுகை கடன் திட்டத்தில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்கள் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.