தேசிய கணக்காய்வு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல்…

தேசிய கணக்காய்வு சட்டம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருவது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 26ம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma