தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவரது விளக்கமறியல் நீடிப்பு…

தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் கே. முத்துவிநாயகத்தின் விளக்கமறியலை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மெல்சிரிபுர விவசாயப் பண்ணையில் உள்ள விடுதியை 2 வருடங்களுக்கு, வாடகைக்கு வழங்குவதற்காக வர்தகர் ஒருவரிடமிருந்து, 6 இலட்ச ரூபாய் இலஞ்சத்தை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 5ஆம் திகதி தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் கே. முத்துவிநாயகம் கைது செய்யபட்டமையும் குறிப்பிடத்தக்கது.