தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸம்மில் பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் ஒன்றினை வழங்கவே இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி கடந்த அரசாங்கத்துடன் இணைந்திருந்த காலப்பகுதியில் மொஹமட் முஸம்மில் அரச பொருளியல் கூட்டுத்தாபனத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது