தேசிய சுதந்திர முன்னணியின் விசேட தேசிய மாநாடு நாளை…

தேசிய சுதந்திர முன்னணியின் விசேட தேசிய மாநாடு நாளை(22) பிற்பகல் 2.00 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

“தேசிய ஒற்றுமையை அழிக்கும் – பிரிவினைவாதத்தை வெற்றி பெறச் செய்யும் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அமைப்பு பொறிக்கு எதிராக போராடுவோம்” என்ற தொனிப் பொருளில் குறித்த இந்த விசேட மாநாடு நடைபெறவுள்ளது.

தேசிய சு.மு தலைவர் விமல் வீரவன்ச சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரச சொத்து துஸ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் அண்மையில் கைதான விமல் வீரவன்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறெனினும் கட்சியின் தலைவர் சிறையில் அடைக்கப்பட்டாலும் திட்டமிட்டவாறு மாநாடு நடைபெறும் என கட்சி அறிவித்துள்ளது.

இந்த விசேட மாநாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை ஏற்க உள்ளார்.

தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.